அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் (89) நலமுடன் உள்ளார் என அவரது மகள் நந்தனா தகவல் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என செய்திகள் காட்டுத்தீ போல் பரவின. சமூகவலைதளங்களில் அமர்த்தியா சென் காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது மகள் நந்தனா தேவ் சென் மறுப்பு தெரிவித்து தனது தந்தை நலமாக உள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் அது போலியான செய்தி. பாபா (அமர்த்தியா சென்) நலமாக இருக்கிறார். எப்போதும் போல் அவர் பிசியாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.