கிராமிய வங்கியில் கொள்ளை முயற்சி.. திருடர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமிய வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
சித்தூர்,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஒசாலாபுரத்தில் சப்தகிரி கிராமிய வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளையர்கள், வங்கியின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா இணைப்புகளை துண்டித்துவிட்டு, பின் ஷட்டரை கியாஸ் கட்டர் மூலம் அறுக்க முயன்றுள்ளனர்.
அப்போது வங்கியில் இருந்து எச்சரிக்கை அலாரம் சத்தமாக ஒலி எழுப்பியது. இதனால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், தங்கள் முயற்சியை கைவிட்டு தப்பியோடிவிட்டனர்.