முஸ்லிம் வீட்டில், பிரபல சாமியார் ஸ்வரூபானந்த பாரதி உணவருந்தினார்
முஸ்லிம் வீட்டில், பிரபல சாமியார் ஸ்வரூபானந்த பாரதி உணவருந்தினார்.
கதக்:
கர்நாடக மாநிலம் கதக்கை சேர்ந்தவர், பிரபல சாமியார் ஸ்வரூபானந்த பாரதி சுவாமி. இவரது தீவிர பக்தர் சிக்கந்தர். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான இவரது வீடு கதக் ஹட்கோ காலனியில் உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு, சாமியார் ஸ்வரூபானந்த பாரதி சுவாமி நேரில் சென்றார். அப்போது அவருக்கு சிக்கந்தரும், அவரது மனைவியும் பாதபூஜை நடத்தினர். அவர்களுக்கு ஓம் நமச்சிவாய என கூறி சுவாமி ஆசிர்வாதம் வழங்கினார். பின்னர் சிக்கந்தரின் வீட்டில் சாமியார் உணவு சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார். கர்நாடகத்தில் சமீபநாட்களாக மதபிரச்சினைகள் கிளம்பி வரும் நிலையில், முஸ்லிம் பக்தரின் வீட்டுக்கு சாமியார் நேரில் சென்று ஆசிவழங்கி உணவு சாப்பிட்ட சம்பவம் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.