2020-2021 நிதி ஆண்டில் ரூ.477 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா..!!
2020-2021 நிதி ஆண்டில் பா.ஜனதா ரூ.477 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.74 கோடி கிடைத்தது.
புதுடெல்லி,
அரசியல் கட்சிகள், தாங்கள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையாக தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்.
அதன்படி, கடந்த 2020-2021 நிதிஆண்டில், தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன. அவற்றை இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
பா.ஜனதா, பல்வேறு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 77 பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி, ரூ.74 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 731 பெற்றுள்ளது. பா.ஜனதா பெற்ற நன்கொடையில் வெறும் 15 சதவீத தொகைேய காங்கிரசுக்கு கிைடத்துள்ளது.