மணிப்பூரில் சமூக அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு
மணிப்பூரில் சமூக அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.;
இம்பால்,
2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் போலீஸ் ஆயுத கிடங்குகளில் இருந்து இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் மற்றும் லட்சக்கணக்கான தோட்டகளும் கலவரக்காரர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றில் வெறும் 1,600 துப்பாக்கிகள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. திருடிய ஆயுதங்களை ஒப்படைக்கும்படி மக்களுக்கு போலீசார் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணிப்பூரில் செயல்படும் சிவில் சமூக அமைப்பான 'மணிப்பூர் நேர்மைக்கான ஒருங்கிணைப்புக் குழு' துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என மக்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 'மணிப்பூர் நேர்மைக்கான ஒருங்கிணைப்புக் குழு' மற்றும் அதன் தலைவரான ஜிதேந்திர நிங்கோம்பா மீது அசாம் ரைபிள் படை தேசத்துரோக மற்றும் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.