அசாம், அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை; மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

அசாம், அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2023-04-20 15:56 GMT

புதுடெல்லி,

அசாம், அருணாச்சல் பிரதேச இடையே 804 கி.மீ. தூரம் எல்லையை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் எல்லைப்பகுதியில் உள்ள 123 கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த 10 ஆண்டுகளக பிரச்னை இருந்து வந்தது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முன்னிலையில் கடந்தாண்டு ஜூலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில முதல்வர்களிடையே சுமூகமான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச அரசுகள் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அசாம் முதல்-மந்திரி ஹிந்தா பிஸ்வா சர்மா, அருணச்சல் பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு ஆகிய இருவரிடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்

"அசாம், அருணாச்சலப் பிரதேசம் இடையே இன்று மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்