ஈஷா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல்

ஈஷா தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2024-10-17 15:57 GMT

சென்னை,

கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்கசென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்று கேள்வி எழுப்பியது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஈஷா மையம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு தடை விதித்தது. மேலும் போலீசாரை பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில், 'ஈஷா மையத்துக்கு சென்ற பலர் காணவில்லை என்றும், காவல்துறையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை செயல்படுகிறது. ஈஷா மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து - மாத்திரைகள் வழங்கப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்