ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம்... பூத்துக்குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் - கண்களைக் கவரும் காட்சிகள்

ஜம்மு காஷ்மீரில் 16 லட்சம் துலிப் மலர்களுடன் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பூத்துக் குலுங்குகிறது.

Update: 2023-04-03 18:14 GMT

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். புகழ்பெற்ற ஸ்ரீநகர் துலிப் தோட்டத்தில் சீசன் களைக்கட்டியுள்ள நிலையில் இந்தாண்டு மார்ச் 24-ம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.

இதில் முதல் 10 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். 68 வகையில் விதவிதமாக பூத்துக் குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி வழங்கப்பட்டுள்ளதோடு, தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்