காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.7 ஆக பதிவு

காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2024-11-27 10:40 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.35 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.20 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சில நொடிகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்