இந்தியாவில் 2025-க்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற வாய்ப்பு- ஆய்வில் தகவல்..!!

ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்குத் திரும்புவதில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-03 15:32 GMT

சென்னை,

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து டீம்லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள 'டேலண்ட் எக்ஸோடஸ்' என்ற ஆய்வு அறிக்கையில், 57 சதவீத ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்குத் திரும்புவதில் ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் நிதியாண்டில் 49 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​2023 நிதியாண்டிற்கான ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பள உயர்வு செயல்திறனை மேம்படுத்தி, வேலை திருப்தியை அதிகரித்தாலும் 2025-க்குள் 20 லட்சம் முதல் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், 2021-ம் ஆண்டில் ஐடி சேவைகள் துறையின் வீழ்ச்சிக்கு புதிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிப்பதே முக்கிய காரணமாகும் என ஆய்வு கூறுகிறது. ஐடி நிறுவனங்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு வருவதால், அங்கு நிறுவனங்களின் சிறந்த ஊழியர்கள் தானாக முன்வந்து அதிக அளவில் வெளியேறுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்