பா.ஜனதா தோல்வி அடையும் குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு சென்றார்.

Update: 2022-09-13 21:00 GMT

ஆமதாபாத், 

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு சென்றார். ஆமதாபாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக சமூக சேவகி மேதா பட்கரை நிறுத்தப்போவதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

குஜராத் தேர்தலில் பா.ஜனதா தோற்கப்போகிறது. அதனால், மேதா பட்கர் இல்லாவிட்டால், வேறு ஏதேனும் ஒரு பெயரை எழுப்புவார்கள். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்தது? அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன செய்யப்போகிறது? என்று மக்கள் கேட்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ''குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது. அக்கட்சியின் கேள்வியை பற்றி கவலைப்படாதீர்கள்'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்