டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக சதி: அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-01-27 05:42 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், " டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரை பாஜக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அவர்களிடம் ரூ.25 கோடி வரை தருவதாக கூறி பாஜக பக்கம் வருமாறு பேரம் பேசியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்வோம்.

அதன்பிறகு எம்.எல்.ஏக்களை இழுத்து ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க உள்ளோம். 21 எம்.எல்.ஏக்களிடம் பேசி வருகிறோம். நீங்களும் வந்து விடுங்கள். உங்களுக்கு ரூ.25 கோடி தருவதோடு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தருகிறோம் என பாஜக கூறியுள்ளது. 21 எம்.எல்.ஏக்களுடன் பாஜக தொடர்பில் இருப்பதாக கூறினாலும் 7 எம்.எல்.ஏக்களை பாஜக தொடர்பு கொண்டு பேசியுள்ளது. 7 எம்.எல்.ஏக்களுமே ஆஃபரை நிராகரித்து உள்ளார்கள்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்