வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம் : அமித்ஷா
ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டனர். அதனால் இது வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சஞ்சீவ் சன்யாலின் "Revolutionaries, The other story of how India won its freedom" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா இவ்வாறு பேசினார். இது தொடர்பாக அமித்ஷா மேலும் கூறியதாவது:
ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்காக ஆயும் ஏந்திய போராட்டம் முக்கியமற்றது என்பதல்ல.
இவ்வாறு ஆயும் ஏந்திய போராட்டங்கள் ஒழுங்கற்ற மற்றும் தனிநபர் போராட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அகிம்சை போராட்டத்தை நியாயப்படுத்த ஆயுதமமேந்திய போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. இந்தியாவை பொறுத்த அளவில், இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை" என்றார்.