ரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.;

Update:2023-02-03 06:30 IST

புதுடெல்லி,

ரெயில்வே துறையில் இந்திய ரெயில்வே நிர்வாக சேவைக்கான (ஐ.ஆர்.எம்.எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த தேர்வுக்கு பதிலாக யு.பி.எஸ்.சி. மூலமாக சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமே இந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடட அறிக்கையில், 'ரெயில்வே அமைச்சகம் யு.பி.எஸ்.சி. மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, யு.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் 2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் இந்திய ரெயில்வே நிர்வாக சேவைக்கு ஆள்சேர்ப்பு நடத்துவது என முடிவு செய்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் இந்த மாற்றத்துக்கான காரணத்தை ரெயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்