மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி மகள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ்!

மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி, தனது மகள் மீதான காங்கிரசாரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Update: 2022-07-24 12:44 GMT

புதுடெல்லி,

மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி, தனது மகள் மீதான காங்கிரசாரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருடைய ௧௮ வயது மகள் சட்டவிரோதமாக கோவாவில் பார் நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பொய் குற்றச்சாட்டு கூறியதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் கொடுத்தார்.இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் பேரா, நெட்டா டி சோஸா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மன்னிப்பு கேட்டு பதில் மனு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்மிருதி ராணியின் மகள் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, அவர் எந்த ஓட்டலுக்கும் உரிமையாளரும் இல்லை. அந்த பார் குறித்து எவ்வித விளக்கம் கேட்டு நோட்டிசும் அவருக்கு அனுப்பப்படவில்லை என்றார்.

காங்கிரஸ் தரப்பில் கூறும் போது, உயிரிழந்த ஒருவரின் பெயரில் அந்த பார் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அதிகாரிகள் மந்திரியின் மகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் அரசியல் காரணங்களால் மீண்டும் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்