ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர்.சி.பி. எம்.பி., வெமிரெட்டி திடீர் ராஜினாமா
வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி தற்போது ஒய்.எஸ்.ஆர்.சி.பி.கட்சியின் நெல்லூர் மாவட்ட தலைவராக உள்ளார்.;
விஜயவாடா,
ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், நெல்லூர் மாவட்ட தலைவருமான வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி தனது எம்.பி. பதவியையும், கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெமிரெட்டியை ஒய்எஸ்ஆர்சிபி மேலிடம் ஓரங்கட்டியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர் விரைவில் தெலுங்கு தேச கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.