ஆசியான் மாநாட்டில் ஆண்டனி பிளிங்கன்-ஜெய்சங்கர் சந்திப்பு; உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை

உக்ரைன், மியான்மர், இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆண்டனி பிளிங்கனிடம் பேசியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-14 16:13 GMT

Image Courtesy : @DrSJaishankar twitter

புதுடெல்லி,

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்டாவில் நடைபெறும் ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். நேற்றைய தினம் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் விவாதித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், "பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து, தற்போது ஆண்டனி பிளிங்கனை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பின் போது இருவரும் உக்ரைன், மியான்மர் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்