சனாதனத்துக்கு எதிரான பேச்சு: தமிழ்நாடு, கேரள டி.ஜி.பி.க்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை - சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழ்நாடு, கேரள டி.ஜி.பி.களுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு விசாரணையை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Update: 2023-09-16 22:20 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

நொய்டாவைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் என்பவர் சார்பில் வக்கீல் பிரீத்தி சிங் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கேரள கல்வித்துறை சார்பில் ஜூலை 21-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள சட்டப்பேரவை சபாநாயகர் ஏ.எம்.ஷம்சீர் இந்து கடவுள்களையும், சடங்குகளையும் வெறும் கட்டுக்கதை என்று பேசியுள்ளார்.

அதுபோல தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இவை தொடர்பாக, மதவெறுப்பு பேச்சு விவகாரத்தில் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, தமிழ்நாடு, கேரள டி.ஜி.பி.களுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு விசாரணையை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்