சட்டவிரோத சொத்து சேர்ப்பு வழக்குகளில் ஊழல் தடுப்பு படை தாமதமாக விசாரணை-கா்நாடக ஐகோர்ட்டு நீதிபதி

சட்டவிரோத சொத்து சேர்ப்பு வழக்குகளில் ஊழல் தடுப்பு படை தாமதமாக விசாரணை நடத்துகிறது என்று கா்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-28 21:13 GMT

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் ஞானேந்திரா சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி ஊழல் தடுப்பு படை போலீசில் குமாா நாயக் என்பவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், கடந்த மார்ச் மாதம் ஞானேந்திரா வீட்டில் சோதனையும் நடத்தி இருந்தார்கள். அவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஞானேந்திரா மீது புகார் அளித்திருந்த குமார் நாயக் மீதே ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவாகி இருந்தது.


இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோா்ட்டில் குமார் நாயக் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீது நடந்த விசாரணையின் போது நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், இந்த வழக்கில் சட்டத்தை ஊழல் தடுப்பு படை போலீசார் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். இதுபோன்று நடைபெறுவதை ஐகோர்ட்டு கண்மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. ஊழல் தடுப்பு படையில் சட்டவிரோத சொத்து சேர்ப்பு வழக்குகளில் வேகமாக விசாரணை நடைபெறுவதில்லை. அது சம்பந்தப்பட்ட வழக்குகளில் தாமதமாக தான் விசாரணை நடத்துகிறார்கள், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்