ஒடிசாவில் சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 7 பேர் பலி

மேற்கு வங்காளம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, சரக்கு லாரி மீது மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2023-02-25 07:13 GMT



ஜஜ்பூர்,


ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரை நோக்கி 7 பேரை சுமந்து கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது.

இந்நிலையில், ஜஜ்பூர் நகரின் தர்மசாலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியுல்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 16-ல் சென்றபோது, சரக்கு லாரி ஒன்றின் மீது இந்த லாரி மோதி உள்ளது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றொருவர் ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. அவர்கள் அனைவரும் மேற்கு வங்காள மாநில பகுதியை சேர்ந்தவர்கள் என காவல் உயரதிகாரி சஞ்சோய் பட்நாயக் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. ஜஜ்பூரில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்