மேலும் 1,331 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே வந்தது
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 2,436 குறைந்தது.;
புதுடெல்லி,
நம் நாட்டில் நேற்று முன்தினம் 1,839 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1,331 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 767 மாதிரிகளைப் பரிசோதித்ததில் தினசரி பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே (0.92 சதவீதம்) பதிவாகி உள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகி இருக்கிறது.
நேற்று ஒரு நாளில் 3,752 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 18 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 2,436 குறைந்தது. இதன்மூலம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 742 ஆகக்குறைந்தது.