காலையில் மாணிக்கம்..மதியம் பாட்ஷா..தர்காவில் ரஜினிகாந்த் வழிபாடு
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்தார்.
திருப்பதி,
நடிகர் ரஜினிகாந்த் 12-ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதிக்கு சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த ரஜினிகாந்த், பின்னர் கடப்பாவுக்கு சென்றார்.
அங்கு, இசையமைப்பாளர் ஏ.ஆ.ர் ரஹ்மானுடன் அமீன் பீர் தர்காவுக்கு சென்று ரஜினிகாந்த்த பிரார்த்தனை செய்தார். அங்கு இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.