தாண்டியா நடனத்தில் கலக்கும் வயது முதிர்ந்த ஜோடி; வைரலாகும் வீடியோ

நவராத்திரி என்பது குஜராத்திகளாகிய எங்களுக்கு, திருவிழா என்பது மட்டுமின்றி, அது உணர்ச்சிப்பூர்வம் வாய்ந்த ஒன்றாகும் என வீடியோவின் தலைப்பு தெரிவிக்கின்றது.;

Update:2024-10-12 15:59 IST

வதோதரா,

குஜராத்தில் நவராத்திரி திருவிழா ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன் களைகட்டும். இளைஞர்களும், இளம்பெண்களும் கர்பா, தாண்டியா உள்ளிட்ட நடனங்களை ஆடுவது வழக்கம். அப்போது, பாரம்பரிய ஆடைகளை அணிந்தபடி, இசைக்கு ஏற்றவாறு நடன அசைவுகளை வெளிப்படுத்துவார்கள்.

இந்த நிலையில், தனிஷ் ஷா என்பவர், அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில், 60 வயது நெருங்கிய ஜோடி ஒன்று பாரம்பரிய கர்பா நடன ஆடைகளை அணிந்தபடி, தாண்டியா நடனத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் பரவசத்துடனும், ஆர்வத்துடனும் ஆடும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த வயதிலும் துடிப்புடன், ஒருங்கிணைந்து நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

கைகளில் குச்சிகளை வைத்து கொண்டு அவற்றை சரியான நேர இடைவெளியில், இசைக்கேற்றபடி தட்டியும், அதற்கேற்ப நடனமும் ஆடி உற்சாகம் ஏற்படுத்தினர். அவர்களுடன் தனிஷ் ஷாவும் கருப்பு வண்ணத்தில் ஆடையணிந்தபடி நடனம் ஆடினார். இந்த வீடியோ வெளியானதும் 1.34 கோடி பார்வையாளர்கள் இதனை கண்டு களித்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் குவிந்துள்ளன.

வீடியோவின் தலைப்பில், நவராத்திரி என்பது குஜராத்திகளாகிய எங்களுக்கு, திருவிழா என்பது மட்டுமின்றி, அது உணர்ச்சிப்பூர்வம் வாய்ந்த ஒன்றாகும். மெய்யான மந்திரங்களை ஏற்படுத்தும் இந்த தருணங்களை நீங்கள் புறந்தள்ளி விட முடியாது என ஷா தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். நடனத்தில் நெருப்பு போல் இந்த ஜோடி சுழன்று ஆடுகிறது என ஒருவரும், இரவின் நட்சத்திரங்கள் அவர்கள் என்று மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். வயது என்பது ஒரு எண் மட்டுமே என ஒருவரும், சூப்பரான உற்சாகத்துடன் நடனம் ஆடுகிற ஜோடியின் சிறந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் என மற்றொருவரும் விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்