லடாக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-11-22 05:24 GMT

லே,

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிமீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்