மராட்டியத்தில் ரெயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ ரிக்சா; ஓட்டுனர் கைது

மராட்டியத்தில் பயணிகள் ரெயில் நடைமேடைக்கு வந்த ஆட்டோ ரிக்சாவை பறிமுதல் செய்து ஓட்டுனர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2022-10-16 10:11 GMT



புனே,


மராட்டியத்தின் மும்பை நகரில் குர்லா பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில், பயணிகள் ரெயில்கள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12-ந்தேதி ஆட்டோ ரிக்சா ஒன்று வந்துள்ளது. இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த பயனாளர்கள் பலர், காவல் துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர். உடனடியாக அதிகாரிகளும் பணியில் இறங்கினர். எனினும், இந்த விசயத்தில் ரெயில்வே போலீசார் முன்பே நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன்படி, அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுனரையும் பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ரெயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதுபற்றிய வீடியோவையும் ரெயில்வே போலீசார் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளனர்.

அதுபற்றிய தகவலில், மதியம் 1 மணியளவில், குர்லா நடைமேடை எண் 1-க்கு ஆட்டோ ஒன்று தவறுதலாக பின்புறத்தில் இருந்து நுழைந்து விட்டது. ஆட்டோ ஓட்டுனரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுனருக்கு கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்