பெங்களூருவின் வளர்ச்சிக்கு ஆலோசனை குழு அமைக்கப்படும்- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

பெங்களூருவின் வளர்ச்சிக்கு ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-05 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்திய பிறகு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவின் வளர்ச்சிக்காக இந்த நகரின் மீது அக்கறை கொண்டவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன். இதற்காக உரிய நிபுணர்கள் அடங்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்கப்படும். வளர்ச்சி பணிகள் குறித்து புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பணிகளை மேற்கொள்ளாமல் பணம் பட்டுவாடா பெறும் முறைகேடுக்கு முடிவுகட்ட வேண்டும். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல. மழை காலம் தொடங்குவதால் பாதிப்பகளை தடுக்க கால்வாய்களில் தூர்வார உத்தரவிட்டுள்ளோம். சாலையின் சுரங்க பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து நாங்கள் பேசவில்லை. சட்ட ரீதியாக உள்ள சிக்கல்கள் தீர்ந்த பிறகு அதுபற்றி யோசிப்போம். ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்