கொரியாவுக்கான இந்திய தூதர் மற்றும் கனடாவுக்கான உயர் ஆணையர் ஆகியோர் நியமனம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

கனடாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-09-06 07:36 GMT

புதுடெல்லி,

கனடாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சய் குமார் வர்மா 1988ம் ஆண்டு ஐ.எப்.எஸ் அதிகாரியானவர், தற்போது ஜப்பானுக்கான இந்திய தூதராக உள்ளார். இந்நிலையில், அவர் கனடாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.கொரியா

அதே போல, அமித் குமார், கொரியா குடியரசின் அடுத்த இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமித் குமார் 1995ம் ஆண்டு ஐ.எப்.எஸ் அதிகாரியானவர், தற்போது சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதரக ஜெனரலாக உள்ளார்.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்