ஆம்புலன்ஸ்-தனியார் பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்

மங்களூரு அருகே ஆம்புலன்ஸ்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Update: 2022-10-09 18:45 GMT

 மங்களூரு;


உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா மியாரு பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றி கொண்டு மங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. மங்களூரு அருகே உள்ள குலசேகரம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் முயன்றுள்ளார்.

அப்போது அதே சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மீது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் ஆம்புலன்சை ஓட்டி வந்த ராஜேஷ்(வயது 52) என்பவருக்கு தோள்பட்டையில் படுகாயம் ஏற்பட்டது.

மேலும் ஆம்புலன்சில் இருந்த ஒரு ேநாயாளி உள்பட 3 பேர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் மற்ெறாரு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து மங்களூரு புறநகர் ே்பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்