அமர்நாத் யாத்திரை: இதுவரை 3.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்!
அமர்நாத் யாத்திரை தொடங்கிய முதல் தற்போது வரை 24 நாட்களில் 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போது வரை 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 62 நாட்கள் நடைபெறும் யாத்திரையில், சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.