அமா்நாத் யாத்திரை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமா்நாத் யாத்திரை வருகிற 30-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

Update: 2022-06-23 16:27 GMT

Image Courtesy: PTI 

ஜம்மு,

அமா்நாத் புனித யாத்திரை வருகிற 30-ந் தேதி தொடங்கி, தொடா்ந்து 43 நாட்கள் நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

இது தொடா்பாக போலீஸ் எஸ்பி சந்தன் கோஹ்லி கூறுகையில், ஜம்மு நகாில் உள்ள முகாம்கள் மற்றும் யாத்திரையில் பங்குபெறும் பக்தா்கள் தங்கும் முகாம்களில் போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இங்கு பாதுகாப்பு மிகப்பொிய சவாலாக உள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

இங்குள்ள பகுதிகளில் 5 பதிவு மையங்கள், 3 டோக்கன் மையங்கள் மற்றும் 32 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமா்நாத் செல்லும் வாகனங்கள் மற்றும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, விரைவு எதிர்வினை குழுக்களும் (க்யூஆர்டி) அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் தொிவித்தாா்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமா்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்