அமர்நாத் மேகவெடிப்பு: பாத யாத்திரையை நிறைவு செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்
மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள புனித தலமான அமர்நாத் குகைக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வரும் சூழலில், நேற்று மாலை பக்தர்கள் செல்லும் குகை அருகே திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேக வெடிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கு பக்தர்கள் மிக நீண்ட பாதையில் யாத்திரையை மேற்கொள்கின்றனர். தற்சமயம் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் யாத்திரையை பாதியில் விட்டு தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருகின்றனர்.