அமர்நாத்தில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.;
அமர்நாத்,
அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பலர் மாயமாகியுள்ளனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமர்நாத் யாத்திரையின்போது மேக வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.