பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அல்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

Update: 2022-09-28 13:34 GMT

திருவனந்தபுரம்,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளில் முடிவில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், டெல்லி, மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமான பிஎப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், மாநில அரசின் தடையை தொடர்ந்து பாப்புலர் ஆப் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், மத்திய அரசின் இந்த முடிவை ஏற்பதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்