புதிதாக தொடங்கப்பட்ட தனியார் விமான நிறுவன இணையதளத்தில் ஊடுருவல்

புதிதாக தொடங்கப்பட்ட தனியார் விமான நிறுவன இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவினர்.;

Update:2022-08-29 02:14 IST

புதுடெல்லி,

ஆகாசா ஏர் என்ற புதிய தனியார் விமான நிறுவனம், கடந்த 7-ந்தேதி தனது விமான போக்குவரத்தை தொடங்கியது. அதற்குள் அதன் இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர்.

அவர்கள் பயணிகளின் பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பார்வையிட்டு இருக்கலாம் என்று ஆகாசா ஏர் நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தவிர, பயண தகவல்கள், பயண பதிவுகள், பணம் செலுத்திய தகவல்கள் ஆகியவற்றை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தனது இணையதளத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளது. மேலும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழுவிடம் புகார் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்