அம்பேத்கர் சிலைக்கு அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. மரியாதை

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு அகண்ட சீனிவாச மூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-04-14 21:03 GMT

பெங்களூரு:-

அரசியல் சாசனம்

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிக்கு உட்பட்ட டானேரி ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகண்ட சீனிவாச மூர்த்தி எம்.எல்.ஏ. நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

அம்பேத்கர் ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட அவர் நமது நாட்டின் பெருமை மிகு தலைவர். நமக்கு அரசியல் சாசனத்தை வகுத்து கொடுத்தார். அவர் பல்வேறு அவமானங்களை சந்தித்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

அம்பேத்கரின் கொள்கைகள்

ஏற்றத்தாழ்வு, தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை போராடினார். நாம் ஒவ்வொருவரும் அம்பேத்கரின் கொள்கை-கோட்பாடுகளை நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். சிறப்பாக கல்வியை பயின்று தன்னை மரியாதை குறைவுடன் பார்த்தவர்களுக்கு உரிய பதிலடி அளித்தார். அம்பேத்கரின் கொள்கைகள் இன்று வரை நம் அனைவருக்கும் உந்துசக்தியாக திகழ்கின்றன. அவரது போராட்ட நாட்களை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு அகண்ட சீனிவாச மூர்த்தி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்