டெல்லியில் மிகவும் மோசமான நிலையில் காற்றின் தரக்குறியீடு
தலைநகர் டெல்லி அடர்த்தியான மாசு, புகைமூட்டத்தில் மூழ்கியதால், நகரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
போபாலில் விஷ வாயு தாக்கியதை அடுத்து, இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசுகட்டுப்பாட்டு தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய தலைநகர் டெல்லி அடர்த்தியான மாசு, புகைமூட்டத்தில் மூழ்கியதால், நகரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான குறியீட்டில் இருப்பதால், அதிகாலை நேரங்களில் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதிலும், சுவாசிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.