திருவனந்தபுரம்-மும்பை இடையே புதிய தினசரி விமான போக்குவரத்தை தொடங்கியுள்ள ஏர் இந்தியா
திருவனந்தபுரம்-மும்பை இடையே புதிய விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
இரு இடங்களுக்கு இடையே இரண்டாவது தினசரி விமான போக்குவரத்து இதுவாகும் என்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ 657 என்ற புதிய விமானம் மும்பையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்தை காலை 7.55 மணிக்கு சென்றடையும். திரும்பும் விமானம், ஏஐ 658, திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு 11.15 மணிக்கு மும்பை சென்றடையும்.
இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் உட்பட 122 இருக்கைகள் இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் - மும்பை செக்டாரில் இது நான்காவது தினசரி சேவையாகும், இண்டிகோவும் அதே வழித்தடத்தில் இரண்டு தினசரி சேவைகளை இயக்குவது குறிப்பிடத்தக்கது.