கர்நாடகாவில் விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது
கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.;
சாம்ராஜ் நகர்,
இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட இருவரும் உயிர் தப்பினர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.