அதிமுக பொதுக்குழு விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு
பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.