பிரதமர் மோடி தனது நண்பர்கள் குரலை மட்டுமே கேட்கிறார்; ராகுல்காந்தி கடும் தாக்கு
நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியும் அக்னிபாத் திட்டம் பல்வேறு குளறுபடிகளை கொண்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இன்று பதிவிட்டு இருப்பதாவது;-
அக்னிபாத்-இளைஞர்களால் நிராகரிப்பு
விவசாய சட்டம்-விவசாயிகளால் நிராகரிப்பு
பண மதிப் பிழப்பு-பொருளாதார நிபுணர்களால் நிராகரிப்பு
ஜி.எஸ்.டி.-வர்த்தகர்களால் நிராகரிப்பு
நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.