ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஷ்காரில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500...? பாகெல் சூசகம்

சத்தீஷ்காரில் சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.500-க்கு கொடுப்பது பற்றி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும் என முதல்-மந்திரி பாகெல் சூசகம் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-07-03 19:58 GMT

ராய்ப்பூர்,

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.500-க்கு மக்களுக்கு வழங்கி வருகிறது. பிற மாநிலங்களில் ரூ.1,000-க்கு கூடுதலாக சிலிண்டர் விற்கப்பட்டு வரும் சூழலில் பொதுமக்களின் சுமையை அந்த மாநில அரசு பெருமளவில் குறைத்து உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தானை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரில் சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.500-க்கு கொடுப்பது பற்றி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா? என முதல்-மந்திரி பூபேஷ் பாகெலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பாகெல், எங்களுடைய கட்சி கமிட்டி அமைக்கப்பட்ட பின்னர் (தேர்தல் அறிக்கை வரைவு பணிக்காக) அனைத்து விசயங்களும் முடிவு செய்யப்படும். அதில், என்னென்ன விவரங்கள் இடம் பெறும் என தெரிய வரும்.

ராஜஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படுகிறது. அறிவிப்புக்காக ஏதேனும் மறைத்து வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. எல்லாவற்றையும் தற்போது செய்து விட்டால், பின்னர் அறிவிப்புக்கு என்ன இருக்கும்? (தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு) என அவர் கூறியுள்ளார்.

இதனால், ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஷ்காரிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு பொது மக்களுக்கு கிடைக்கப்பெறும் என முதல்-மந்திரி பாகெல் சூசகம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்