மத்திய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அபுல் கலாம் ஆசாத் பற்றிய வரிகள் நீக்கம்
மத்திய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அபுல் கலாம் ஆசாத் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
என்.சி.இ.ஆர்.டி. என்னும் மத்திய பாடத்திட்டத்தின் கீழ்வரும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து முஸ்லிம் ஒற்றுமை. ஆர்.எஸ்.எஸ். தடை பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில், தற்போது அதே பாடத்திட்டத்தின் 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வி மந்திரியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அந்தப் புத்தகத்தில் 'அரசியல் சாசனம்- ஏன் எப்படி' என்ற முதல் அத்தியாயத்தில் அரசியல் நிர்ணய சபை கூட்டங்கள் பற்றிய வரிகளில் அபுல் கலாம் ஆசாத் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.