ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

Update: 2023-07-11 00:50 GMT

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. அதோடு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்