சாலை பணிகளை விரிவுப்படுத்த கோரி வக்கீல்கள் போராட்டம்

பத்ராவதியில் சாலை பணிகளை விரிவுப்படுத்த கோரி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-15 05:15 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து ஒசமனே சிவாஜி சர்க்கிள் வரை தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட வரைவுகள் தயாராகியுள்ளது. இந்நிலையில் பத்ராவதி வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்த சாலை அமைக்கும் பணிகளை தாலுகா அலுவலகம் வரை விரிவுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி,பத்ராவதி தாலுகா அலுவலகம் வரை சாலையை திட்ட வரைபடம் மாதிரி அகலப்படுத்த கோரி போராட்டம் நடத்தினர். முன்னதாக ஊர்வலமாக வந்த அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பத்ராவதி-ஒசமனே சிவாஜி சர்க்கிள் வரை நடக்கும் சாலை பணிகளை, தாலுகா அலுவலகம் வரை விரிவுப்படுத்தவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் தாசில்தாரிடம் இது குறித்து மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்