சிவமொக்கா மாவட்ட வளர்ச்சியில் கூடுதல் கவனம்

சிவமொக்கா மாவட்ட வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-26 18:45 GMT

சிவமொக்கா:

குடியரசு தினவிழா

இந்தியாவில் 74-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் மாவட்ட வாரியாக இந்த குடியிரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் பி.சி.சாலையில் உள்ள மாவட்ட சிறப்பு காவல் படை பயிற்சி வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர் சிறப்பு காவல் படை, மாவட்ட ஆயுதப்படை, என்.சி.சி, சாரணர், சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவமொக்கா விமான நிலையம்

இதையடுத்து மந்திரி நாராயணகவுடா பேசியதாவது:- சிவமொக்கா மாவட்ட வளர்ச்சியில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிவமொக்காவில் குறைந்த நாட்களில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த விமான நிலையம் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்படும். இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, விமான நிலையத்தை திறந்து வைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்