நடிகை விதிஷா கர்ப்பம்
கன்னட நடிகை விதிஷா கர்ப்பமாக இருக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெங்களூரு:-
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சான்வி ஸ்ரீவஸ்தவா. இவரது சகோதரி விதிஷா ஆவார். இவரும் நடிகை ஆவார். இவர் 'விராட்' என்ற கன்னட திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை விதிஷா, சாயக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தேனிலவு, இன்ப சுற்றுலா என்று வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த விதிஷா தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் 'போட்டோசூட்' நடத்தினார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நடிகை விதிஷாவுக்கு பாராட்டு தெரிவித்து தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.