பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடிகர் கிச்சா சுதீப் சந்திப்பு

கன்னட நடிகர் கிச்சா சுதீப், ஹுப்ளி விமான நிலையத்தில் வைத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.;

Update: 2023-04-19 13:03 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த ஊர்வலத்தில் பங்கேற்க வந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், ஹுப்ளி விமான நிலையத்தில் வைத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் நகரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் பசவராஜ் பொம்மை, ஜே.பி.நட்டா, கிச்சா சுதீப் ஆகிய மூவரும் இணைந்து பங்கேற்றனர். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்