மாயாவதி குறித்து சர்ச்சை கருத்து - பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

நடிகர் கமல் ரஷித் கான் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-06-14 06:20 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல சினிமா நடிகர் கமல் ரஷித் கான். இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குறித்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு சர்ச்சையை கிளப்பிய நிலையில், சஹாரன்பூர் மாவட்டத்தின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சுஷில் குமார் என்பவர் நடிகர் கமல் ரஷித் கான் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கமல் ரஷித் கான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்