"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது"திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது ஆசிட் ஊற்றிய இளம்பெண்

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது 5 லிட்டர் ஆசிட்டை ஊற்றிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்;

Update:2022-11-02 12:28 IST

சோனிபட்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காதலிக்க மறுத்த பெண் ஆசிட் வீச்சுக்கு ஆளாகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டு இருக்கலாம். ஆனால் சமீபத்தில் அரியானாவின் சோனிபட்டில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

தன்னை காதலிக்க மறுத்த வாலிபர் மீது இளம் பெண் ஒருவர் 5 லிட்டர் ஆசிட்டை கொட்டி உள்ளார்.

அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் வசிப்பவர் ஷியாம் சிங் ( வயது 25).அவருக்கு பெற்றோர் இல்லை. சோனிபட்டில் உள்ள மயூர் விஹாரில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.

சதார் காவல் நிலைய கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி ( வயது 23) என்ற பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அஞ்சலி ஷியாமை தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

ஒரு நாள் அந்த பெண் திடீர் என தன் தாயுடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு வந்து உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷ்யாம் சிறிது அவகாசம் கேட்டுள்ளார்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது ஷியாமுக்கு தெரியவந்தது. அஞ்சலி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் ஷியாமும் அவரது அத்தையும் திருமணத்திற்கு மறுத்து விட்டனர்.

இதனால் கோபமடைந்த அந்த பெண், அந்த இளைஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். நீ எனக்கு கிடைக்கவில்லை  என்றால் யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்றும் கூறி மிரட்டி உள்ளார்.

ஷியாம் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தினார். இதனால் மேலுm கோபம் அடைந்த அந்த பெண் மயூர் விஹார் தெருக்களில் ஷியாமின் போட்டோவை வைத்து தேடி உள்ளார். ஆனால் ஷியாம் அந்த பெண்ணின் கண்ணில் சிக்கவில்லை

ஆனால் கடந்த அக்டோபர் 26 அன்று மாலை, ஷியாம் வீட்டை வீட்டு வெளியே வந்து உள்ளார். அப்போது மறைந்து இருந்து திடீரென்று பாய்ந்து வந்த அந்த பெண் தான் கையில் மறைத்து வைத்து இருந்த 5 லிட்டர் ஆசிட் பாட்டிலில் உள்ள் ஆசிட்டை ஷியாமின் மேல் வீசினார். இதில் ஷியாமின் கை, கால், வாய், கழுத்து, இடுப்பு ஆகிய பகுதிகள் எரிந்து விழுந்தது. வலியில் அலறியபடி ஷியாம் ஓடினார்,. அஞ்சலியும் விரட்டி விரட்டி ஆசிட் ஊற்றினார். இதில் பலத்த காயம் அடைந்த ஷியாமை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்

ஷியாமின் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசியூவில் இருக்கிறார்.

டிஎஸ்பி சிட்டி வீரேந்திர ராவ் கூறுகையில், எங்களுக்கு ஆசிட் வீசியதாகக புகார் வந்துள்ளது. இளைஞரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை. அத்தையின் வாக்குமூலத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்

இளைஞர் மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் அஞ்சலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்