எச்.டி.குமாரசாமியின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது.

Update: 2022-08-02 21:03 GMT

பெங்களூரு:


தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்றிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் பெங்களூருவுக்கு துமகூரு வழியாக புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்கான போலீசார் ஒரு வாகனத்தில் சென்றிருந்தனர். இந்த நிலையில் குனிகல் தாலுகா திப்தூர் கேட் பகுதியில் வந்த போது பாதுகாப்பு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.


இதில் மகேஷ், மஞ்சுநாத், ஆனந்த் ஹரீஷ் ஆகிய 3 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆதிசுஞ்சனகிரியில் உள்ள பி.ஜி.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். விபத்து பற்றி அம்ருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்